UPCOMING EVENTS

குத்புல் அக்பர் வல் கௌதுல் அஷ்ஹர் அபில் ஹஸன் அலிய்யுஷ்ஷாதுலி இமாம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு…பகுதி – 4

இந்த ஒரு சம்பவத்தை சொல்லி அவர்களது எல்லையில்லா சீர் சிறப்புகளை பற்றிய நம் தொடரை நிறைவு செய்வோம் இன்ஷா அல்லாஹ்.

கௌதனா ஷெய்கனா அபுல் அப்பாஸ் அல்-முர்ஸி நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு – இவர்கள் ஷாதுலி நாயகத்தின் தலை சிறந்த முரீதும், பிரதி பிரதிநிதியுமாவார்கள். ஷெய்கு நாயகத்தின் பல கஷடமான சோதனைகளுக்கு பின்னும் அவர்கள் மீது உள்ள உகப்பு மாறாதவர்கள், அதை ஒரு கஷ்டமாகவே நினைக்காதவர்கள் –  பொருட்படுத்தாதவர்கள்!  இவர்களை பார்த்து ஷாதுலி நாயகம் சொன்னார்கள், ஓ! அபுல் அப்பாஸே! நாம் உம்மை கலீஃபாவாக ஆக்கிவைத்து விட்டு சென்று விடலாம் என்றால் அது எளிது. ஆனால் நாமாக நீர் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம் என்றார்கள். அப்படிப்பட்ட மிக உச்சமான மகாமை வழங்கப்பட்டவரகள் கௌதனா ஷெய்கனா அபுல் அப்பாஸ் அல்-முர்ஸி நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு.

அந்த சீதேவி நாயகம் சொல்கிறார்கள். நான் ஒரு முறை எனது ஆன்மீகமான ஏற்றத்தின் போது, ஏழு வானம் கடந்து ஏறி செல்கையில், ஒளி சமுத்திரத்தில் மூழ்கியவனாக என்னை கண்டேன். அங்கு மிகவும் உச்சமான ஒர் இடத்தில் கௌதனா ஷெய்கனா அபூ மத்யனுல் மஃக்ரிபி ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் அர்ஷின் ஒளிவில் தோய்ந்து நனைந்தவர்களாக நிற்க கண்டேன். அவர்களிடம் நான் நெருங்கி சென்று தங்களுடைய மகாம் – படித்தரம் – உலூம் என்ன என்று வினவினேன். அவர்கள் சொன்னார்கள், ‘எனது மகாம் ஸித்தீக்கீன்களுக்கும் மேல்! அல்லாஹ் தஆலா எனக்கு எழுபது விதமான ஞானக்கடல்களை நன்கொடை அளித்துள்ளான்’ என்று கூறினார்கள். கௌதுல் அஃழம் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் பாதத்தை அவர்கள் உலகில் வாழும் போதே சுமந்தவர்கள் அல்லவா! சுப்ஹானல்லாஹ்!

இந்த இடத்தில், அவர்கள் ஸித்தீக்கீன்களுக்கும் மேல் என்று சொன்னதின் விளக்கத்தை அறிந்து கொள்வது நல்லது. ஸித்தீக்குகளின் பதவிக்கு மேல் நபிமார்கள் தானே என்று யோசிக்கலாம். உன்மை தான், ஆனால் அவர்கள் அப்படி சொல்லவரவில்லை. ஒரு உதாரனம் சொன்னல் புரியும். நமது உலக கல்வியியலில், ஒரு மாணவர் அறுபது மதிப்பெண்கள் எடுத்தால், முதல் வகுப்பு மாணவர். இன்னொரு மாணவர் எல்லா பாடங்களிலும் நூற்றுக்கு நூறு எடுத்திருக்கிறார், இவரையும் முதல் வகுப்பு மாணவர் என்று சொன்னாலும், அவர் அதற்கும் மேல் தானே? அது போல் புரிந்துகொள். ஸித்திக்கீன்களுக்கு குறைந்த பட்சம் இருக்க வேண்டிய பண்புகளையும், இன்னும் மேலதிகமாக நற்பண்புகளையும் கொடைகொடுக்கப்பட்டவர்கள் ஷெய்கனா கௌதனா அபூ மத்யனும் மஃக்ரிபி ரழியல்லாஹு தஆலா அன்ஹு.அவர்களின் சிறப்பை அறிய இன்னொரு விஷயமும் சொல்ல வேண்டும்….

ஷைகுல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அரபி ரழியல்லாஹு தஆலா அன்ஹு. இவர்களை பற்றி ஆன்மீக பாட்டையில் செல்பவர்கள் அறியாமல் இருக்கமாட்டார்கள். இவர்கள் கௌதுல் அஃழம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களுக்கு 90வது வயது இருக்கும் போது இவ்வுலகில் பிறந்தார்கள். இந்த மஹான் தமது வாழ்நாளில் ஷெய்கனா கௌதனா அபூ மத்யனும் மஃக்ரிபி ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களை சென்று சந்திக்க மிகவும் ஆவலுற்றவர்களாக இருந்தார்கள். இவர்களின் ஊர் அந்தலூசிய எனும் இன்றைய ஸ்பெய்ன் அவர்கள் மொரொக்கோவில், தூரம் மிக அதிகம்.

இப்படியே இருக்கும்போது ஒரு நாள் அவர்கள் மஃக்ரிபு தொழுது விட்டு திரும்பும்போது ஒரு மனிதர் நின்று கொண்டிருந்தார். எங்கிருந்து வந்தார் இவர் என்று இவர்கள் ஆச்சர்யத்தில் இருக்கும் போதே அந்த மனிதர் சொன்னார், நான் அபூ மத்யன் மஃக்ரிபு அவர்களிடமிருந்து வருகிறேன். உங்களுக்கு சலாம் சொன்னார்கள் என்று ஸலாமை எத்திவைத்திவிட்டு தொடர்ந்தார்கள், அவர்களை சந்திக்க வேண்டும் என்ற உங்களுடைய ஆவலை இறைவனிடம் முறையிட்டார்களாம், ஆனால் அல்லாஹ் தஆலா உங்கள் சந்திப்பு இங்கில்லை மறுமையில் தான் என்று அறிவித்து விட்டானாம் என்று உங்களிடம் கூறி வர சொன்னார்கள். ஷைகுல் அக்பர் நாயகம், நமது கல்பில் உள்ளதை எங்கோ இருக்கும் அபூ மத்யன் நாயகம் அவர்கள் விளங்கியுள்ளார்களே, இவ்வளவு நீண்ட தூரத்திற்கு ஒரு மனிதரை அனுப்பி தகவலை சொல்லசொல்லியுள்ளார்களே என்று மிகவும் ஆச்சர்யப்பட்டவர்களாய், நீங்கள் அங்கிருந்து எப்பொழுது கிளம்பினீர்கள் என்று கேட்டார்கள். அந்த மனிதர் சொன்னார், இந்த மஃக்ரிப் அவர்கள் பின்னால் நின்று தொழுதேன், ஸலாம் வாங்கிய பின் என்னை இங்கு அனுப்பினார்கள்.

வந்தவர்கள் அப்தால் என்று புரிந்து கொண்ட ஷைகுல் அக்பர் நாயகம் அவர்களிடம், உங்களுக்கு அபூ மத்யன் நாயகத்திடம் எத்தனை நாட்களாக தொடர்பு என்று வினவினார்கள். அவர்கள் ‘ஒரு பதினாறு நாட்களுக்கு முன் தான் எனக்கு அவர்கள் பைஅத் எனும் தீட்சை தந்தார்கள். சுப்ஹானல்லாஹ்! இவ்வளவு மிக கடப்பான விலாயத்தின் உச்சியில் உள்ளவர்கள் தான் கௌதனா ஷெய்கனா அபூ மத்யன் அல்-மஃக்ரிபி அவர்கள். ரழியல்லாஹு தஆலா அன்ஹும் அஜ்மஈன்!

இப்பேற்பட்டவர்களிடம் ஏற்பட்ட தனது சந்திப்பை தான் அபுல் அப்பாஸ் முர்ஸி நாயகம் சொல்கிறார்கள்…அவர்களது மகாம் பற்றி சொன்னவுடன், மிகவும் பணிவாக நான், ஸெய்யிதீ ஷெய்கீ எனது எஜமானர் ஷெய்கு நாயகம் அபில் ஹஸன் அலிய்யுஷ்ஷாதுலி ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் எங்கே என்று பரவசமுற்று கேட்டேன். அவர்கள், ஹை ஹாத ஹை ஹாத! எங்கேயோ உயர்ந்துவிட்ட அவர்களையா இங்கு தேடுகிறீர்கள்! அவர்கள் மிக உச்சத்தில் அல்லவா இருக்கிறார்கள். அவர்களுக்கு அல்லாஹ் என்னை விட நாற்பது ஞானக்கடல்களை அதிகமாக அளித்துள்ளானே என்றார்கள். சுப்ஹானல்லாஹ்!

இப்பேற்பட்ட உன்னத நாயகத்தின் முரீதுகள் – பிள்ளைகள் யார் என்று அவர்களிடம் கேட்டதற்கு, ஷாதுலி நாயகம், என்னுடைய ஹிஸ்பை அல்லது எனது பிள்ளைகளின் ஹிஸ்பையோ ஒரு முறை உகப்புடன் ஒதியவரும் என் பிள்ளைதான் என்றார்கள். புர்தா ஷரீஃபிலுள்ள மௌலாய ஸல்லி…என்று ஓதாத சுன்னத் ஜமாஅத்தார்கள் இருக்க இயலாது. இதை கோர்வை செய்த பூஸ்ரி இமாமவர்கள் ஷாதுலிய்யா தரீக்காவை சேர்ந்தவர்கள். அது போல் ஜலாலா ஓதுவது ஷாதுலிய்யா தரீக்காவினுடையது, காதிரிய்யா தரீக்கா ராத்திபில் அஹ்மதுல்லாஹ் பைத்தில் ஒவ்வொரு அடியிலும் லாயிலாஹ இல்லல்லாஹ் லாயிலாஹ இல்லல்லாஹ் லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர்ரஸூலுல்லாஹ் என்று அந்த ஜலாலாவைத்தான் ஓதப்படுகிறது. எனவே இந்த நாதாக்களின் பிள்ளைகளாக உகப்பிற்கு உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக நம் முன்னோர்கள் அழகாக அமைத்து தந்திருக்கின்றார்கள். இந்த சீரான பாட்டையிலே செவ்வையாக செல்வதை விட்டு விட்டு தரீக்காவின் வேலையோடு தப்லீக் வேலையும் நடக்கும் என்று சொல்லும் வீனர்களின் பேச்சில் மயங்கி விட வேண்டாம். ஒரு போது ஒளிவும் இருளும் ஒன்று சேர இயலாது! வழிகேடான தப்லீக் ஜமாஅத்திற்கும் உன்னதமான ஷாதிலிய்யா தரீக்காவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அப்படி சம்பந்தம் இருக்கின்றது என்று ஒருவன் சொன்னால் அவன் நிச்சயமாக முனாஃபிக்காகத்தான் இருப்பான்! அல்லாஹ் காப்பாற்றுவானாக!

யா அல்லாஹ்! எமது எஜமானர் ஷாதுலி நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் சொன்னார்களே, அது போல் கேட்கின்றோம்! ஷாதுலி நாயகத்திற்காக எம் பிழைகளை பொறுப்பாயாக, அவற்றை மன்னிப்பாயாக -மறைப்பாயாக, மேலும் அவற்றையெல்லாம் நன்மையாக மாற்றுவாயாக! இனி ஒருபோதும் அதனளவில் மீளாமல் காப்பாற்றுவாயாக! ஷாதுலி நாயகத்திற்காக எங்களது கடன் – கஷ்டம் – நோய் – முஸீபத்துகளை அகற்றுவாயாக! ஷாதி நாயகத்தின் முகத்திற்காக எங்களையும், எங்கள் பெற்றோர்களையும், மனைவி – மக்கள் – எங்களை நேசிப்பவர்கள் மற்றும் அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தினர் அனைவரையும் இவ்வுலகில் ஈமானோடு சீமானாக வாழவைத்து, சிறப்பான உனது நேசத்திற்குரிய கூட்டத்தில் ஆக்கியருள்வாயாக!

ரழியல்லாஹு அன் குத்புல் அக்பர்! ரழியல்லாஹு அன் கௌதுல் அஷ்ஹர்!

அவர்களது திவ்ய ரவ்ழா முபாரக், அவர்களின் சீர் சிறப்பு, ஹழரா மஜ்லிஸ்களை இந்த பதிவுகளில் பார்க்கலாம்.

https://www.youtube.com/watch?v=QzeGmS8xXsc

https://www.youtube.com/watch?v=M8lwIFAl8Xw

https://www.youtube.com/watch?v=GWHghhLmrAM

https://www.youtube.com/watch?v=7JbQlC3RfBg

https://www.youtube.com/watch?v=IcRhGkXSzNE

Related Posts