UPCOMING EVENTS

என்னை அழையுங்கள் ; நான் உங்களுக்கு பதிலளிக்கிறேன்

உங்கள் இறைவன் கூறுகிறான்: “என்னை அழையுங்கள் ; நான் உங்களுக்கு பதிலளிக்கிறேன்; சூரா முஃமின் 40:60. என்று இருக்க ஏன் அவ்லியாக்களை இடைத்தரகர்களாக்குகிறீர்கள், இது ஒரு வகையான இணைவைப்பல்லவா? அல்லாஹ்வுக்கு தெரியாதா? அவ்லியாக்கள் சொல்லித்தான் தெரியுமா? இன்னும் அவன் உங்கள் பிடரி நரம்பை விட நெருக்கமாக இருக்கிறானே என்று 50:16 ஆயத் சொல்கிறதே?

இந்த வாதம் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. அவர்களிடம் கேட்கிறோம். இந்த ஆயத் ‘“என்னை அழையுங்கள் ; நான் உங்களுக்கு பதிலளிக்கிறேன்;’ இது உங்களுக்கு நேரடியாக இறங்கியதா? ஏன் அல்லாஹ் நேரடியாக இறக்கவில்லை? (50:16 ஆயத்தில், நாம் இருக்கிறோம் என்று தான் சொல்கிறான், இதில் நாம் என்பது கிராமன் காதிபீன் போன்ற மலக்குகள்,இன்னும் சிறப்பானவர்களை குறிக்கும்) சரி சரி பிடரி நரம்பை விட நெருக்கமாக இருக்கும் அல்லாஹ் உங்களிடம் நேரடியாகவே சொல்லிவிடலாமே ஏன் 1400 ஆண்டுகளுக்கு முன் ரஸூலுல் அக்ரம்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தேர்ந்தெடுத்து சொன்னான்? பின் ஸஹாபாக்கள் தபியீன்கள், இப்படி தொடராக சொல்லியள்ளவா உங்களை வந்து சேர்ந்தது? மறை சொல்கிறது, அந்த வழியிலேயே சென்று அவனை அடைந்து கொள்ளுங்கள் என்று.

ஆனால்,இன்று இந்த தவ்ஹீது பேசுபவர்கள், எப்படி வந்ததோ அந்த நல்லவர்களின் தொடரை உடைத்து விட்டு நேரடியாக கேட்டால் கிடைக்கும் என்று சொல்வது, தக்வாவின் அடைப்படையில் அல்ல, நான் என்ற அகந்தையும், பெரியவர்களை உதாசீனப்படுத்தும் எண்ணத்தாலுமே என்பதில் சந்தேகமில்லை என்பதை இங்கே நாம் பதிவு செய்கிறோம்.

 நன்றி : முஹ்யித்தீன் டீவி.காம்