UPCOMING EVENTS

குத்புல் அக்பர் வல் கௌதுல் அஷ்ஹர் அபில் ஹஸன் அலிய்யுஷ்ஷாதுலி இமாம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு…பகுதி – 1

குத்புல் அக்பர் வல் கௌதுல் அஷ்ஹர் ஸெய்யிதுனஷ் ஷெய்கு அபில் ஹஸன் அலிய்யிஷ் ஷாதுலி நாயகம் அவர்களின் கீர்த்தியைப் பற்றி இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹுமா

இமாமுல் அரூஸ் நாயகம் அவர்கள் கூறுகிறார்கள்: நான் ஷாதுலிய்யா, காதிரிய்யா தரீகத்தின் ஷெய்குமார்கள் பலருடைய ஏடுகளையும், சூபியாக்களின் கிதாபுகளையும் நோட்டமிட்டேன். தபகாத்து ஸஃரானிய்யா, மஃபாஹிருல் அலிய்யா, அன்வாருல் குத்ஸிய்யா, லதாயிபுல் மினன், பூசரி இமாம், யாபிய்யி இமாம் ஆகியோரின் கஸீதாக்கள் இன்னும் இவை அல்லாத எண்ணற்ற கிதாபுகளையும் பார்வையிட்ட போது அவர்கள் அனைவரும் ஷாதுலி  நாயகத்தின் உயர்ந்த உன்னதமான அந்தஸ்த்தை பற்றி நீளமான செய்திகளை எழுதியுள்ளதைப் பார்த்தேன். எத்தனையோ அவர்களுடைய பிரபலமான அற்புதங்கள் பற்றி அவற்றில் ஆதாரப்பூர்வமான அறிவிப்புகள் வந்துள்ளன. இந்த மேன்மக்களுடைய எச்சிலை சுவைத்து அவர்களின் அடிச்சுவட்டை பின்பற்றி நானும்  அவர்களைப் புகழ வேண்டும் என்ற ஆசை எனக்குள் எழுந்தது. அல்லாஹ்தஆலா சில நேசர்களைக் கொண்டு ஷாதுலி  நாயகத்தின் மகிமைகளை எழுதும் எண்ணம் நிறைவேற உதவினான். மேலப்பாளையத்தை சார்ந்த ஷாதுலி ய்யா தரீகாவைப் பின்பற்றும் தோழர் மஞ்சி அஹ்மது மீரான் அவர்கள் எனக்கு இந்த விசயத்தில் உதவினார். அல்லாஹ் அவரையும் நம்மையும் சீதேவிகளின் கூட்டத்தில் ஆக்கி நிறைந்த பாக்கியம் தருவானாக ஆமீன்.

ஷாதுலி என்ற பெயர் தனக்கு விடப்பட்ட காரணம் பற்றி ஷாதுலி நாயகம் அவர்கள், தன் இரட்சகனிடம் ‘இறைவா! ஏன் எனக்கு ஷாதுலி  என பெயரிட்டாய். நான் ஷாதிலா நகரைச் சார்ந்தவன் அல்லவே என்று கேட்டதற்கு, அலியே! நாம் ஷாதுலி என்று உமக்கு பெயரிடவில்லை. அன்த ‘சாதுன் லீ’ எனக்கு நீர் கிடைப்பதற்கு அரியவர். என் மஹப்பத்திற்காகவும், என் பணிவிடைக்காகவும் தனித்து விடப்பட்டவர் என்று கூறப்பட்டது.

ஷாதுலி  நாயகம் அவர்கள் தங்களது லௌகீக கல்விகளை ஷெய்கு நஜ்முத்தீன் இஸ்பஹானி ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம்  கற்றனர். அவ்வாறே அந்தரங்க ஞானங்களை குத்பு அப்துஸ் ஸலாம் இப்னு மஷீஷ் ஆரிப் ரப்பானி ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் இருந்து கற்று அவர்களிடம் தீட்சை பெற்றுக் கொண்டனர்.

ஷாதுலி  நாயகம் அவர்களின் பதவி அல்லாஹ்வின் பால் மிக நெருக்கமானதாகவும், உயர்ந்த உன்னத நிலையில் உள்ளதாகவும் இருக்கிறது. ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம் அளவிலும் மிக நெருக்கமானவர்களாக ஷாதுலி  நாயகம் இருக்கிறார்கள். எனவே அல்லாஹ் அவர்களது உண்மையான நாவில் இந்த சொல்லை வெளியாக்கினான்.

என் பாட்டனார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விட்டும் எனக்கு கண்மூடி முழிக்கும் நேரம் திரையிடப்பட்டாலும் என்னை நான் முஃமினாக எண்ண மாட்டேன், என் பாட்டனாரின் சுன்னத்துக்களில் ஒன்றை விட்டாலும் என்னை நான் முஸ்லிமாக எண்ண மாட்டேன் என ஷாதுலி  நாயகம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் தொடர்கிறார்கள்…

சத்தியமாகவே ஷாதுலி நாயகம் கூறினார்கள், ”இதோ என்னுடைய பாதமாகிறது அவ்லியாக்களின் நெற்றிகளின் மீதிலாயிருக்கும்’ மகத்துவமிக்க அவர்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டு ஈடேற்றம் பெறுவீர்களாக!

மேலும், ”எனது பாட்டனார் ஷஃபீஉல் முத்னிபீன் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விட்டும் கண் சிமிட்டும் நேரம் நான் திரையிடப ்பட்டால் என்னை நான் முஸ்லிமாக எண்ணமாட்டேன்”  என்று முழக்கமிட்ட ஷாதுலி நாயகத்தின் ஹாலை கண்ணியப்படுத்துவாயாக!

ஷாதுலி நாயகமே! உங்கள் காலணிபட்ட மண்ணுக்கு எம் உயிரும், நஃப்ஸும் அர்ப்பணமே! அனைத்து தீங்குகளை விட்டும்

உங்களை கொண்டல்லவா நாங்கள் விடுவிக்கப் பெற்றோம்!’

ரழியல்லாஹு அன் குத்புல் அக்பர்! ரழியல்லாஹு அன் கௌதுல் அஷ்ஹர்!

வழங்குபவர்கள்: www.muhieddeentv.com  / www.quthbiyamanzil.org

Related Posts