ரத்தின சுருக்கமான துஆ ‘யா வஹ்ஹாப் யா தவ்வாப்’ – 1

நாட்கள் உருண்டோடுகின்றதே முறையாக நாம் அல்லாஹ்விடம் வேண்ட துஆக்கள் தெரியாதே என்று கவலைப்பட வேண்டாம். நம் குத்பிய்யா மன்ஜிலில் வழமையாக ஒதி வரும் ‘யா வஹ்ஹாப் யா தவ்வாப்’ இருக்கிறதே அது ரத்தின சுருக்கமான ஒரு துஆவாகும்.

அதன் முதலடியில், யா வஹ்ஹாப் யா தவ்வாப் துப் அலல் முஃமினீன்

கேட்காதவருக்கும் கொடையளிக்கும் வஹ்ஹாபாகியவனும், பாவங்களை மன்னிக்கு தவ்வாபாகிய அல்லாஹ் தஆலாவிடம் முஃமின்களின் பாவங்களை மன்னிப்பாயாக என்று கேட்கிறோம்.

இரண்டாவது அடியில், ஸல்லி சல்லிம் அலா ஷாஃபிஇல் முத்னிபீன்

பாவிகளுக்கு மன்றாடும் ஷஃபீஉல் முத்னிபீன் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்-ஸலாம் சொல்ல இறைவனை வேண்டுகிறோம்.

மூன்றாவது அடியில், வர்ழ அன் மௌலானா கௌதுல் அஃழம் முஹ்யித்தீன்

எமது எஜமானர் கௌதுல் அஃழம் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் மீது உனது திருவுள பொருத்தத்தை பொழிவாயாக என்று வேண்டுகிறோம் (அது போல் காஜா நாயகம், ஷாதுலி நாயகம், சுல்தானுல் ஆரிஃபீன் நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹும் அஜ்மஈன் இன்னும் இது போன்ற, அல்லாஹ் தஆலா உகந்த அந்த உன்னதமான நாதாக்களின் பெயரை சொல்லி கேட்கலாம்)

இதையெல்லாம் சொல்லிய பின் நான்காவது அடியில் அவர்களைக் கொண்டே நமது நாட்டதேட்டங்களை நிறைவேற கேட்கிறோம். இந்த பதிவு நமது நாதாக்களின் முகத்திற்காக அருளப்படும் எல்லையில்லா அருட்கொடைகளை எப்படி பெற்றுக்கொள்ளலாம் என்பதை பற்றியதே!

முதலாவது ஃபர்ழ் – கடமைகளை எளிதில் பெற்றுக்கொள்ள, நான்காவது அடியில் ‘வ யஸ்ஸிர் லனா பிஹி குல்ல ஃபர்ழின் யா மதீன்’

மட்டிட முடியாத சக்தனாகிய மத்தீனே! அவர்களை கொண்டே எங்களுக்கு ஒவ்வொரு ஃபர்ழையும் – கடமைகளையும் லேசாக்கி வைப்பாயாக! என்று கேட்க வேண்டும். ஆக..

 

யா வஹ்ஹாப் யா தவ்வாப் துப் அலல் முஃமினீன்

ஸல்லி சல்லிம் அலா ஷாஃபிஇல் முத்னிபீன்

வர்ழ அன் மௌலானா கௌதுல் அஃழம் முஹ்யித்தீன்

வ யஸ்ஸிர் லனா பிஹி குல்ல ஃபர்ழின் யா மதீன்

يَا وَهَّابُ يَا تَو َّ  ابُ     تُبْ عَلَي الْمُؤ ْمِنِيْنَ

صَلِّ  سَلِّمْ   عَلٰي شَافِعِ الْمُذْ نِبِيْنَ

وَارْضَ عَنْ  مَوْلَانَا  غَوْثُ الْاَعْظَمْ مُحْيِ الدِّيْنْ

وًيَسِّرْلَنَا بِهِ  كُلَّ فَرْضٍ يَا مَتِيْنْ

ஃபர்ழ் என்றால் கடமை. கடமைகளில் முதன்மையானது தொழுகை. நமது பிள்ளைகள் ஏழு வயது ஆகிவிட்டால் அவர்களை தொழுவதற்கு ஏவ வேண்டும். மூன்று வருடங்கள் அவர்களை செல்லம் கொஞ்சி ‘வாப்பா தொழுங்கோ, உம்மா தொழுங்கோ என்று அந்த பழக்கத்தை ஏற்படுத்தி விட வேண்டும். பத்து வயது ஆன பின்னும் தொழவில்லையானால் காயம் ஏற்படாதவாறு அடித்து தொழ வைக்க வேண்டும் என்று தாயினும் கருணை உள்ளம் கொண்ட  கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் என்றால் அந்த தொழுகை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது தெளிவாகிறது. கடமைகளில் முதலாவதாக உள்ள இந்த தொழுகையை, இன்னும் அது போல நோன்பையும்,  நாமும் எளிதில் அந்த நேரத்தில்  நிலைநிறுத்தி, நமது பிள்ளைகளும் அது போல் செய்ய வைப்பாயாக என்பதும், நான்காவது அடியில் நாம் கேட்கும் ‘மட்டிட முடியாத சக்தனாகிய மத்தீனே! அவர்களை கொண்டே எங்களுக்கு ஒவ்வொரு ஃபர்ழையும் – கடமைகளையும் லேசாக்கி வைப்பாயாக!  துஆவில் உள்ளது.

எனவே ஒதி பலன் பெறுவோமாக.

ரத்தின சுருக்க துஆ – யா வஹ்ஹாப் மகிமைகள் இன்ஷா அல்லாஹ் தொடரும்…

வஸல்லல்லாஹு அலா ஷஃபீஉல் முத்னிபீன் ஸெய்யிதினா முஹம்மதின் வஆலிஹி வஅஸ்ஹாபிஹி அஜ்மஈன். வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்!

Related Posts