UPCOMING EVENTS

குத்புல் அக்பர் வல் கௌதுல் அஷ்ஹர் அபில் ஹஸன் அலிய்யுஷ்ஷாதுலி இமாம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு…பகுதி – 2

ஷாதுலி நாயகம் வாழ்க்கை குறிப்பு

பெயர்: அபுல் ஹஸன் அலிய்யுஷ் ஷாதுலி ரழியல்லாஹு தஆலா அன்ஹு

தந்தை பெயர்: ஸெய்யிதினா அப்துல்லாஹ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு

தாயார் பெயர்: ஸெய்யிததினா உம்மு ஹபீபா என்ற ஸாதிகுல் ஜன்னா ரழியல்லாஹு தஆலா அன்ஹா.

பிறப்பு: ஹிஜ்ரி 593 (கி.பி. 1196-1197) துல்கஃதா மாதம்.

மறைவு: ஷவ்வால் பிறை 10. ஹிஜ்ரி 656 (கி.பி. 1158)

வயது: 63

பிறந்த இடம்: வட மேற்கு ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள மஃரிப் என அழைக்கப்படும் மொரோக்கோ நாட்டில் உமாரா என்ற கிராமம்.

மறைந்த இடம்: ஹுமைதரா ஷரீஃப் – எகிப்து.

பரம்பரை: நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் 17வது தலைமுறைப்பேரர்.

ஸெய்யிதினா அபுல் ஹஸன் அலிய்யுஷ் ஷாதுலி – ஸெய்யிதினா அப்துல்லாஹ் – ஸெய்யிதினா அப்துல் ஜப்பார் – ஸெய்யிதினா தமீம் – ஸெய்யிதினா ஹுர்மூஜ் – ஸெய்யிதினா ஹாத்தீம் – ஸெய்யிதினா குஸை – ஸெய்யிதினா யூஸூப் – ஸெய்யிதினா யூஷஉ – ஸெய்யிதினா வர்து – ஸெய்யிதினா பத்தால் – ஸெய்யிதினா அஹ்மது – ஸெய்யிதினா முஹம்மது – ஸெய்யிதினா ஈஸா – ஸெய்யிதினா முஹம்மது – ஸெய்யிதினா ஹஸனுல் முதன்னா – ஸெய்யிதினா ஹஸன் – ஸெய்யிதினா அலி ரழியல்லாஹு தஆலா அன்ஹும் அஜ்மஈன்.

ஆசிரியர்: ஸெய்யிதினா நஜ்முத்தீன் இஸ்பஹானி ரழியல்லாஹு தஆலா அன்ஹு.

குருநாதர்: ஸெய்யிதினா அப்துஸ் ஸலாம் இப்னு மஷீஷ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு

சீடர்: ஸெய்யிதினா அபுல் அப்பாஸில் முர்ஸீ ரழியல்லாஹு தஆலா அன்ஹு.

யாம் பெற்ற அவ்ராதுகள்: 1. அல்முகத்தமல் கஜியா 2. கிதாபுல் உக்வா 3. ஹிஸ்புல் பர். 4. ஹிஸ்புல் பஹ்ர் 5. ஹிஸ்புல் கபீர். 6. ஹிஸ்புல் தம்ஸ் அல்h உயூனில் ஐதா 7. ஹிஸ்புந் நஸ்ரு. 8. ஹிஸ்புல் லுத்பு 9. ஹிஸ்புல் பத்ஹ் 10. ஸலாத்துல் பத்ஹ் மக்ரிப் 11. ஒளராதுக் களஞ்சியம். 12. வழீபாக்கள்.

கால இடைவேளை: ஸெய்யிதினா கஸ்ஸாலி இமாம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு  மறைந்து 88 வருடத்திற்குப் பின்பும்,

கௌதுல் அஃலம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு நாயகம் மறைந்து 32 வருடத்திற்குப் பின்பும்,

சுல்தானுல் ஆரிபீன் செய்யிது அஹ்மது கபீர் ரிபாஈ ரழியல்லாஹு தஆலா அன்ஹு நாயகம் மறைந்து 15 வருடத்திற்குப் பின்பும்,

குத்புல் ஹிந்த் காஜா முஈனுத்தீன் ஜிஸ்தி அஜ்மீரி ரழியல்லாஹு தஆலா அன்ஹு நாயகம் இந்தியாவில் 63 வயதில் சேவை செய்து கொண்டிருக்கும் போதும்,

ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அரபி ரழியல்லாஹு தஆலா அன்ஹு நாயகம் 33 வயதில் ஆத்மஞானம் பயிற்றுவிக்கும் நேரத்திலும் ஷாதுலி நாயகம் பிறந்தார்கள்.

ரழியல்லாஹு அன் குத்புல் அக்பர்! ரழியல்லாஹு அன் கௌதுல் அஷ்ஹர்!

Related Posts