UPCOMING EVENTS

கௌதனா ஷெய்கனா ஸெய்யிது ஸாதாத் உமரொலி மௌலானா ரழியல்லாஹு தஆலா அன்ஹு – பாகம் 1

வழங்குபவர்கள்: www.muhieddeentv.com  / www.quthbiyamanzil.org

வாழ்க்கை குறிப்பு!

மாதிஹுர் ரஸூல் இமாம் ஷெய்கு ஸதக்கத்துல்லாஹ்  வலியுல்லாஹ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் மகள் கதீஜா உம்மாள் அவர்களின் மகன் அப்துல்காதிர் அவர்களின் மகனார் தான் நமது நாயகம் உமர் வலியுல் காஹிரி ரழியல்லாஹு தஆலா அன்ஹு அன்ஹு அவர்கள்.

பிறப்பு: ஹிஜ்ரி 1162

மறைவு: ஹிஜ்ரி 1216 துல்கஃதா பிறை 14

பெயர்: செய்யிது உமர் வலி மௌலானா ரழியல்லாஹு தஆலா அன்ஹு

தந்தை: செய்யிது அப்துல் காதிர் இப்னு மஹ்மூது ரழியல்லாஹு தஆலா அன்ஹு.

தாயார்: சித்தி பாத்திமா ரழியல்லாஹு தஆலா அன்ஹா

மனைவி: செய்யிது மீரா உம்மாள் ரழியல்லாஹு  தஆலா அன்ஹா

மக்கள்: 6 ஆண்கள் 1 பெண்

  1. ஷெய்கு அப்துல் காதிர் தைக்கா சாகிபு ரழியல்லாஹு தஆலா அன்ஹு
  2. ஹழ்ரத் செய்யிது முஹம்மது ரழியல்லாஹு தஆலா அன்ஹு
  3. ஹழ்ரத் மஹ்மூது ரழியல்லாஹு தஆலா அன்ஹு
  4. ஹழ்ரத் செய்யது அஹ்மது ரழியல்லாஹு தஆலா அன்ஹு
  5. ஹழ்ரத் அஹ்மது கண்டு ரழியல்லாஹு தஆலா அன்ஹு
  6. ஸெய்யிதா பாத்திமா ரழியல்லாஹு தஆலா அன்ஹா
  7. ஹழ்ரத் முஹ்யித்தீன் ரழியல்லாஹு தஆலா அன்ஹு

நாம் அப்துல் காதிரை கொண்டு ஆரம்பித்து முஹ்யித்தீனை கொண்டு முடித்தோம் – உமரொலி அப்பா நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு

ஞான குருமார்கள்:

  1. ஷாரிபுல் லபன் என்னும் பால்குடி அப்பா (பாலப்பா) என்று அழைக்கப்படும் ஷெய்கு முஹம்மது நுஸ்கி காஹிரி ரழியல்லாஹு தஆலா அன்ஹு –
  2. ஷெய்குல் ஜிப்ரி ஹழ்ரமிய்யி ரழியல்லாஹு தஆலா அன்ஹு
  3. மதீனா ஷரீப் முப்தி செய்யிது முஹ்ஸினுல் முகைபலிய்யி ரழியல்லாஹு தஆலா அன்ஹு
  4. செய்யிது முஹம்மது புஹாரி கண்ணனூரி ரழியல்லாஹு அன்ஹு

மத்ஹப்: ஷாபியி

தரீகா : காதிரிய்யா

அகீதா : அஷ்அரிய்யா

வமிசம்: அவர்கள சித்தீகி என்று பிரபலமான சொல் இருந்தாலும், அவர்கள் ஸெய்யிது வமிசத்தினர். கௌதனா ஷெய்கனா தைக்கா ஸாஹிப் அப்பா அவர்கள், தமது தம்பி மஹ்மூது நெய்னா அவர்கள் மீது சொன்ன மர்திய்யாவில் அவர்கள் எல்லோருமே நபிகளின் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்கிறார்கள். இது போன்று இன்னும் பலமான ஆதாரங்கள் அவர்கள் ஸாதாத்மார்கள் என்பதற்கு உள்ளன.

கலீபாக்கள்: ஹழ்ரத் தைக்கா சாகிபு அப்பா காஹிரி, கீழக்கரை தைக்கா சாஹிபு அப்பா, முஹம்மது  லெப்பை அப்பா ரழியல்லாஹு தஆலா அன்ஹும் அஜ்மஈன்!

இன்ஷா அல்லாஹ் தொடரும்…

Related Posts