UPCOMING EVENTS

பெற்றோர்…

ஒருவன் தன் பெற்றோரை நினைத்து பார்க்க வேண்டும். ஐந்தறிவை விட இயலாதவனாக பிறக்கிறான். காரணம் அது தானாக எழும்பி தாயிடம் அமுதருந்துகிறது. நாம்? இன்னும், நாம் அவர்களுக்கு கொடுத்ததெல்லாம் துன்பமே, மல-ஜலம், சதா அழுகை, இது போல. ஆனால் அவர்களிடமிருந்து பெற்றதெல்லாம் கருணையும் கிருபையுமே! எல்லாம் நலன்களே!

இதை ஒருவன் நினைத்து,

ரبப்பிர்ஹம்ஹுமா கமா ரப்பயானீ ஸغகீரா

மாدதாமتதிர்ரஹ்மதة யாஅர்ஹமர்ராஹிமீன்

இறைவா என்னை அவர்கள் (நான் துன்பம் தந்தும் அதை பொருட்படுத்தாமல்) மிகவும் கிருபையோடு என்னை வளர்த்தார்களே, அது போல் நீயும் அவர்களுக்கு (உனக்கு – உனது வழிப்பாட்டில் தவறிழைத்தாலும் அதை நீ பொருட்படுத்தாமல்) உனது கிருபைகடாட்சம் நிலவும் காலமெல்லாம் மிகவும் கிருபை செய்வாயாக கிருபையாளர்கெல்லாம் மிகக்கிருபையாளனே

رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيٰـنِيْ صَغِيْرًا

 مَا دَامَةِ الرَّحْمَة ُ   يَا اَرْحَمَ الرَّاحِمِيْن

இந்த துஆவை, நம்மை படைத்தவன் தம் அருள் நபிகளை அழைத்து, ‘ரப்பே என்னை சிறு பிராயத்தில் என் மீது கருணை பொழிந்த அந்த இருவர்கள் மீது நீ உனது கருணையை பொழிந்தருள்’ என்று பெற்றோர்களுக்காக கேட்கசொன்னான். அவருக்கு ரஹ்மத் செய் இவருக்கு ரஹ்மத் செய் என்று கேளுங்கள் என்று அல்லாஹ் தஆலா சொல்லவில்லை! என்னை பெற்ற வளர்த்த,  எனது தாய் – தகப்பர்களுக்கு ரஹ்மத் செய் என்று சொல்லியிருப்பதிலிருந்து இதன் முக்கியத்துவத்தை புரியமுடிகிறது.  ஆக எந்த நாளிலுல் சிறந்த துஆஅவாகவும் குறிப்பாக ரமழானின் முந்திய, ரஹ்மத்துடைய பத்து நாளில் கேட்பதற்கு  இதை விட சிறந்த துஆ இருக்க முடியாது. எனவே மாதத்தின் மொத்த மணி நேரத்தை கணக்கிட்டு, 720 தொகைக்கு இதை ஓதுங்கள், அப்படி ஓதினால் ஒவ்வொரு மணி நேரமும் தனது பெற்றோருக்காக கையேந்தியவராவார் என்று நமது நாதாக்கள் சொல்லித்தருகிறார்கள்.

அன்னையின் அடியின் கீழே அமைந்தது சொர்க்கம் என பொன்மொழிக்கு ஈடு உண்டோ பொன்மொழி நெஞ்சே நெஞ்சே என்று அன்னல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன வாக்கியத்தை நினைப்போம். உருகி வேண்டுவோம் நமது பெற்றோர்களுக்காக!

வஸல்லல்லாஹு அலா ஷஃபீஉல் முத்னிபீன் ஸெய்யிதினா முஹம்மதின் வஆலிஹி வஅஸ்ஹாபிஹி அஜ்மஈன். வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்!

Related Posts