முஃமின்களின் முதல் பெருநாள் கொண்டாட்டம் – மீலாதுன்னபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
- 27-09-2016
- Aqida - Doctrines
யா வஹ்ஹாப் யா தவ்வாப் துப் அலல் முஃமினீன்
ஸல்லி சல்லிம் அலா ஷாஃபிஇல் முத்னிபீன்
வர்ழ அன் மௌலானா கௌதுல் அஃழம் முஹ்யித்தீன்
‘வ யஸ்ஸிர் லனா பிஹி குல்ல சுன்னத்தின் யா மதீன்’
(‘வ யஸ்ஸிர் லனா பிஹி குல்ல நஃபிலின் யா மதீன்’)
முந்திய பதிவுகளில் ஃபர்ழான விஷயங்களை உதாரனம் சொன்னோம், ஃபர்ழை போல், தொழுகை – ஜகாத் – நோன்புகளில் சுன்னத்துகள் இருக்கின்றது. ஜகாத்திற்கு பின் ஸதக்கா, நன்கொடைகள் மற்றும் தமது இன பந்துக்களுக்கு, சகோதர சகோதரிகளுக்கு உதவ வேண்டும் என்பதெல்லாம் மேலதிகமான நஃபில் வகையை சேரும். தகுதி – வசதி இருந்தாலும் அதை நடைமுறை படுத்த லேசாக இருக்க வேண்டுமே, அதற்காக அந்த நான்காவது அடியில் இப்படி ஓதிக்கொள்ளலாம்..
‘வ யஸ்ஸிர் லனா பிஹி குல்ல சுன்னத்தின் யா மதீன்’
‘வ யஸ்ஸிர் லனா பிஹி குல்ல நஃபிலின் யா மதீன்’
மட்டிட முடியாத சக்தனாகிய மத்தீனே! அவர்களை கொண்டே எங்களுக்கு ஒவ்வொரு சுன்னத்தையும் – மேலதிகமான நற்செயல்களையும் புரிவதை லேசாக்கி வைப்பாயாக!
அது போல் இல்ம் எனும் கல்வி ஞானம். கல்வி பயில்வதற்கு வயது வரம்பில்லை. இன்னும் அறிவு ஞானம் இரண்டு வகைப்படும். ஒன்று முயற்சியின் மூலமாக கிடைக்கப்பெறுவது ஓத படிக்க சென்று பெற்றுக்கொள்வது மற்றொன்று அல்லாஹ் தஆலா தனக்கு பிடித்தவர்களுக்கு உதிப்பாக்கி கொடுப்பது. இதற்கு உதாரனமாக நாம் குடிக்கும் தண்ணீரையே கூட சொல்லலாம். மிக கஷ்டப்பட்டு கினறு தோண்டி அல்லது பம்பிங்க் செய்து தண்ணீர் பெறுவது ஒரு வகை, நம்முடைய எந்த முயற்சியுமில்லாமல், திடீரென தட தட வென்று மழை பெய்து கினறு – ஆறு – குளமெல்லாம் சுவையான நீரை நிறைத்து விடுகின்றது. இது போல் தான் அறிவும் – ஞானமும். இந்த நம்பிக்கை முஸ்லிம்களிடம் மட்டுமல்ல எல்லா சமூகத்திலும் உண்டு. தமிழிலும் சொல் இருக்கின்றது. படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு, படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு என்று.
இன்னும் நாம் நம்முடைய உயிரினும் மேலான கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே யாரிடமும் கால்மடித்து படிக்கவில்லை. அல்லாஹ் தஆலாவே அவர்களுக்கு ஞானம் புகட்டினான். ஆக நுபுவ்வத்துடைய உச்சமே வஹ்பி – எனும் மேலிருந்து வழங்கப்பட்டதாகவே இருக்கின்றது. அது போல் விலாயத்திலும். இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயம், ஷெய்குமார்களிலும் உம்மிகள் – மத்ரஸா சென்று ஓதாமல் ஞானம் பெற்றவர்கள் இருக்கின்றார்கள். இவர் ஆலிமில்லை, பட்டம் பெறவில்லை, மத்ரஸா சென்று ஓதவில்லை என்று ஒரு ஷெய்கை மறுத்து இன்கார் செய்பவன் மரனத்திற்கு முன் உம்மியான ரஸூலுல் அக்ரம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் இன்கார் செய்து விட்டு மோசமான முடிவை தான் சந்திக்க வேண்டி வரும். அல்லாஹ் பாதுகாப்பானாக! ஆக இந்த மகத்தான அதிகமதிகம் பெற்றுக்கொள்ள வேண்டி அந்த நான்காவது அடியில் இப்படி ஓதிக்கொள்ளலாம்…
‘வ யஸ்ஸிர் லனா பிஹி தலபல் இல்மி யா மதீன்’
يَا وَهَّابُ يَا تَو َّ ابُ تُبْ عَلَي الْمُؤ ْمِنِيْنَ
صَلِّ سَلِّمْ عَلٰي شَافِعِ الْمُذْ نِبِيْنَ
وَارْضَ عَنْ مَوْلَانَا غَوْثُ الْاَعْظَمْ مُحْيِ الدِّيْنْ
وًيَسِّرْلَنَا بِهِ طَلَبَ الْعِلْمِ يَا مَتِيْنْ
மட்டிட முடியாத சக்தனாகிய மத்தீனே! அவர்களை கொண்டே எங்களுக்கு இல்ம் – அறிவை தேடுவதை (அதை அடைவதில்) லேசாக்கி வைப்பாயாக!
இந்த புனித ரமழானில் அதிகமாக துஆ கபூலாக்கப்படும் நேரங்கள் இருப்பதனால் இதை அடிக்கடி ஓதி நாம் பயன்பெற்றுக்கொள்வோமாக!
வஸல்லல்லாஹு அலா ஷஃபீஉல் முத்னிபீன் ஸெய்யிதினா முஹம்மதின் வஆலிஹி வஅஸ்ஹாபிஹி அஜ்மஈன். வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்!