UPCOMING EVENTS

ரத்தின சுருக்கமான துஆ ‘யா வஹ்ஹாப் யா தவ்வாப்’ – 2

யா வஹ்ஹாப் யா தவ்வாப் துப் அலல் முஃமினீன்

ஸல்லி சல்லிம் அலா ஷாஃபிஇல் முத்னிபீன்

வர்ழ அன் மௌலானா கௌதுல் அஃழம் முஹ்யித்தீன்

வ யஸ்ஸிர் லனா பிஹி குல்ல ஃபர்ழின் யா மதீன்

يَا وَهَّابُ يَا تَو َّ  ابُ     تُبْ عَلَي الْمُؤ ْمِنِيْنَ

صَلِّ  سَلِّمْ   عَلٰي شَافِعِ الْمُذْ نِبِيْنَ

وَارْضَ عَنْ  مَوْلَانَا  غَوْثُ الْاَعْظَمْ مُحْيِ الدِّيْنْ

وًيَسِّرْلَنَا بِهِ  كُلَّ فَرْضٍ يَا مَتِيْنْ

நாம் செய்யவேண்டிய கடமையான விஷயத்தில் தொழுகைக்கு அடுத்து   தலையான விஷயம், தாய் தகப்பர்களுக்கு மரியாதை கொடுப்பது,! அவர்கள் அழைத்தால் தொழுகையில் இருந்தாலும், தொழுகையை விட்டு விட்டு பதில் சொல்லுங்கள் (பின்னால் திருப்பி தொழவேண்டும்) என்று ஹதீஸில் இருக்கிறது. இன்னும் குர்ஆனில் அல்லாஹ் தஆலா சொல்கிறான், அவர்களை பார்த்து ‘சீ’ என்று சொல்லாதீர்கள், ‘கோபமாக சப்தம் உயர்த்தி பேசாதீர்கள்,  நீங்கள் அவர்கள் முன்னால் நிற்கும் போது உங்கள் இரு புஜங்களை பணித்து கண்ணியமாக பேசுங்கள் என்கிறான்.

சிந்திக்கவேண்டும், சொல்வது யார்? படைத்த நாயனான அல்லாஹ் தஆலா!  கற்பனை செய்து பார்க்க வேண்டும், உங்களை காவல் துறை அதிகாரிகள் பயங்கரவாத கும்பலுடன் தொடர்பிருக்குமோ என்ற சந்தேகத்தின் பேரில் விசாரனைக்காக அழைத்து சென்று கேள்வி கேட்கும்போது எப்படி பதில் சொல்வீர்கள்? உண்மையிலே உங்களுக்கு தொடர்பு இல்லை தான். இருப்பினும் உங்கள் பதில் எப்படியிருக்கும்?  “யோவ் என்னை, எங்க ஊர் தலைவருக்கு நல்லாத்தெரியும். அவரிடம் கேளுய்யா என்னப்பத்தி சொல்வார்” என்று சொல்வீர்களா? அல்லது பவ்யமாக, “சார் வேண்டுமென்றால் எங்கள் ஊர் தலைவரிடம்  கேளுங்கள் சார். அவருக்கு என்னைப்பற்றி நன்றாக தெரியும் சார்” என்று சொல்வீர்களா? அப்படி மரியாதையாக, பெற்றோர்களிடம் இருந்து கொள்ளுங்கள் என்கிறான் அல்லாஹ் தஆலா! அதன் பின் ஆண்டவனே! நான் சிறு பிராயத்தில் எனக்கு கருணை புரிந்தார்களே அது போல் நீ அவர்களுக்கு கருணையை பொழிவாயாக! என்று கேளுங்கள் என்று சொல்லித்தருகிறான். இந்த மாபெரும் கடமையையும் எங்களுக்கு அந்த நாதாக்களை கொண்டு லேசாக்கி தா என்பதும் நான்காவது அடியில் நாம் கேட்கும், மட்டிட முடியாத சக்தனாகிய மத்தீனே! அவர்களை கொண்டே எங்களுக்கு ஒவ்வொரு ஃபர்ழையும் – கடமைகளையும் லேசாக்கி வைப்பாயாக! என்ற துஆவில் உள்ளது.

இனி, ஹலாலான சம்பாத்தியத்தை தேடுவது ஒவ்வொரு முஸ்லிம் மீது கடமையாகும் என்று இருக்கிறது. ஆண்கள் சம்பாதிக்க – உழைக்க வேண்டும் என்று சொல்வது பெண்ணினத்தை தாழ்த்துவது அல்ல. அவள் இல்லத்தரசியாக இருந்து சகல வீட்டு நிர்வாகங்களில் அவனுக்கு உதவியாக இருப்பாள் என்பது அர்த்தம். ஆனால், இன்று முஸ்லிமாக்கள் – பெண்கள் – தாயமார்கள் தங்களது வாழ்வாதாரங்களுக்காக வேலை செய்ய தாய்நாட்டை விட்டே அயல் நாடு பயனம் செய்யும் சூழ்நிலை உருவாகியுள்ளது எதனால் என்பதை சிந்திக்கவேண்டும். இவன் செய்ய வேண்டிய கடமைகளை சரியாக செய்ய வில்லையா?. நன்றாக சம்பாதிக்க வேண்டும் – பெஞ்சாதி பிள்ளைகளுக்கு – தாய்தகப்பர்களுக்கு கொடுக்க வேண்டும், கடமையாக்கப்பட்ட ஜகாத் எனும் ஏழைவரி செலுத்த வேண்டும். இப்படியெல்லாம் செய்வதற்கு,  மட்டிட முடியாத சக்தனாகிய மத்தீனே! அவர்களை கொண்டே எங்களுக்கு ஒவ்வொரு ஃபர்ழையும் – கடமைகளையும் லேசாக்கி வைப்பாயாக! என்ற துஆவை கேட்கிறோம், வழிதெரியாமல் விழி பிதுங்கி நிற்பவர்கள், இன்னும் பிரத்யோகமாக இப்படியும் கேட்கலாம்,

‘வ யஸ்ஸிர் லனா பிஹி தலபல் ஹலாலி யா மதீன்’

يَا وَهَّابُ يَا تَو َّ  ابُ     تُبْ عَلَي الْمُؤ ْمِنِيْنَ

صَلِّ  سَلِّمْ   عَلٰي شَافِعِ الْمُذْ نِبِيْنَ

وَارْضَ عَنْ  مَوْلَانَا  غَوْثُ الْاَعْظَمْ مُحْيِ الدِّيْنْ

وًيَسِّرْلَنَا بِهِ  طَلَبَ الْحَلاَلِ   يَا مَتِيْنْ

மட்டிட முடியாத சக்தனாகிய மத்தீனே! அவர்களை கொண்டே எங்களுக்கு ஹலாலான (நேர்மையான) சம்பாத்தியத்தை தேடுவதை (அதை அடைவதை) லேசாக்கி வைப்பாயாக!

ரத்தின சுருக்க துஆ – யா வஹ்ஹாப் மகிமைகள் இன்ஷா அல்லாஹ் தொடரும்…

வஸல்லல்லாஹு அலா ஷஃபீஉல் முத்னிபீன் ஸெய்யிதினா முஹம்மதின் வஆலிஹி வஅஸ்ஹாபிஹி அஜ்மஈன். வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்!

Related Posts