முஃமின்களின் முதல் பெருநாள் கொண்டாட்டம் – மீலாதுன்னபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
- 27-09-2016
- Aqida - Doctrines
கேள்வி இங்கே பதில் எங்கே?
இன்று நம்முடைய மஷாயிகுமார்கள் உலமாக்கள், குர்ஆன் ஹதீஸ்களுக்கு தரும் விளக்கங்கள் ஸாஹபிகள் – தாபியீன்கள் வாயிலாக இமாம்கள் இப்படி வாழையடி வாழையாக வந்த விளக்கங்கள் தான் என்று நாம் விளங்கி கொள்ள வேண்டும். ஆனால் குர்ஆன் – ஹதீஸை விளங்குவதற்கு இமாம்கள் தேவையில்லை என்று சொல்லும் கலிகால போலி தவ்ஹீதுவாதிகள், ஸஹீஹ் – லயீஃப் என்று ஒரு ஹதீஸை நிர்னயிக்க இமாம்களை ஏன் எடுக்கிறார்கள்?
வழங்குபவர்கள்: www.muhieddeentv.com / www.quthbiyamanzil.org
உதாரனமாக அறிவிப்பாளர்களின் விவரங்களை அடக்கிய மிக முக்கியமான கிதாபு தஹ்தீபுத்தஹ்தீப். இந்த கிதாப் ஹிஜ்ரி 700க்கு பிறகு வந்தவர்களால் எழுதப்பட்டது. நாம் கேட்கிறோம், இந்த கிதாபு எழுதப்பட்ட காலம் ஹிஜ்ரி 700க்கு பின். ஆனால் அறிவிப்பாளர்கள் வாழ்ந்த காலம் ஹிஜ்ரி 50 – 100, இப்படிப்பட்ட கிதாபை இவர்கள எடுத்துக்கொள்வது எந்த அடிப்படையில்? இமாம்களின் குர்ஆன்-ஹதீஸ் விளக்கங்களை நிராகரிப்பது எந்த அடிப்படையில்? ஒரு தக்லீது கூடும், இன்னொரு தக்லீது கூடாதா?
இன்னொரு கிதாபு (அறிவிப்பாளர்களை பற்றியது) ஷம்ஷுத்தீன் தஹபி என்ற இப்னு தைமிய்யா(குழப்பத்தின் தலைவாயில்)வின் மாணவர் எழுதியது ‘மீஜானுல் இஃதிதால்’. இதிலிலுள்ள அறிவிப்பாளர்களின் பற்றிய தகவல்களை கண்ணைமூடி ஏற்றுக்கொள்வார்களாம். ஆனால் நாம், இமாம்களின் குர்ஆன் ஹதீஸ் விளக்கங்களை கண்ணைமூடி பின்பற்றக்கூடாதாம்!
அதற்கு அவர்கள் சொல்வது, தஹபியை நாங்கள் பின்பற்றவில்லை அவர் கிதாபை தான் ஏற்றுக்கொள்கிறோம் என்று! சுத்த பைத்தியக்காரத்தனமாக இல்லை? அந்த கிதாபை கண்ணைமூடி பின்பற்றுவதால் தானே இன்ன அறிவிப்பாளர் பலகீனமானவர், இவர் நம்பத்தகுந்தவர் என்று சொல்கிறார்கள்! இல்லாவிடில், ஹிஜ்ரி 50ல் வாழ்ந்த ஒருவரை ஹிஜ்ரி 700க்கு பின் வந்தவர் நல்லவர் – பலகீனமானவர் என்று சொல்வதை அறிவு எப்படியப்பா ஏற்றுக்கொள்ளும்?
ஆக அவர்கள், நம் இமாம்கள் விஷயத்தில் கண்ணைமூடி பின்பற்றக்கூடாது என்று சொல்லிவிட்டு, அதற்கே முரனாக அவர்கள் ஒரு (அறிவிப்பாளர் பற்றிய கிதாபு எழுதிய) பல இமாம்களை தக்லீது செய்கிறார்கள் என்பது தான் உண்மை!
இது போக, இன்னொரு விஷயம் புஹாரி ஷரீஃபிலுள்ள ஹதீஸில் வரும் அறிவிப்பாளர் தொடர் அவர்களோடு முற்றுப்பெற்று விடுகிறது. அதன் பின் இத்தனை நூறாண்டுகள் ஓடிவிட்டதே! இதற்கு அறிவிப்பாளர்கள் பட்டியல் எங்கே? பதில் கியாமத் வரையிலும் வராது. இந்த அறிவாளிகள் தான், நாம் நம்முடைய அவ்லியாக்களின் வாழ்விலிருந்து ஒரு சம்பவத்தை சொன்னால், ‘ஹதீஸில் ஆதாரமுண்டா’ என்று கேள்வி கேட்பார்கள்!
ஆனால் நம்முடைய மஷாயிகுமார்கள் சொல்லும் ஒவ்வொரு விஷயத்திற்கும் ரஸூலுல் அக்ரம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரையிலும் அறிவிப்பாளர்களின் பட்டியல் – ஸில்ஸிலா தொடர் உள்ளது.
அப்படி ஸில்ஸிலாவுடன் உள்ள மஷாயிகுமார்களின் கூற்றை ஏற்றுக்கொள்வதானால் மட்டும் தான் ஆலிம்களின் சொல்லை நாம் ஏற்றுக்கொள்ள முடியும்! இன்னும் தெளிவாக சொன்னால், புஹாரி முஸ்லிம் கிரந்தத்திற்கு மத்ரஸாவில் ஓதிப்படித்த ஸில்ஸிலா இல்லாத சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் சொல்லும் விளக்கத்தை விட, ஸில்ஸிலா தொடர்புடைய உண்மையான மஷாயிகுமார்கள் – காமிலான அவ்லியாக்கள் சொல்லும் விளக்கம் தான் மிகத்தெளிவானதும் மிக ஆதாரபூர்வமானதுமாகும்!
வஸல்லல்லாஹு அலா ஷஃபீஉல் முத்னிபீன் ஸெய்யிதினா முஹம்மதின் வஆலிஹி வஅஸ்ஹாபிஹி அஜ்மஈன். வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்!