UPCOMING EVENTS

How to become Awliya Allah?! அவ்லியாவாக ஆவது எப்படி?

ஒரு சுவையான சம்பவம். ஒரு முறை முகலாய மன்னர் ஷாஜஹான் அந்த காலத்தில் வாழ்ந்து வந்த அத்தாவுல்லாஹ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களை சந்திக்க மிகவும் நாடினார். நிச்சயமாக அவர்கள் அரன்மனைக்கு வருகை தர மாட்டார்கள் என்று தெரிந்திருந்த மன்னர் ஒற்றர்களை அனுப்பி அவர்களை கண்கானிக்கசொன்னார். பின் அவர்கள் தில்லி பக்கம் வந்த போது மன்னர் தமது ஏவலர்களை அனுப்பி அவர்களை எப்படியாவது அழைத்து வருமாறு ஏவினார். அதுபோல் ஏவலர்கள் அவர்களை பல்லக்கில் தூக்கி வைத்து ஒருவாறாக அரண்மனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். பின் அல்லாஹ் அளவில் ஃபகீராக இருந்த அவர்களுக்கு முடிவெட்டி, முகசவரம் செய்து, அருசுவை உணவு கொடுத்து விருந்தினர் மாளிகையில் தங்க செய்தனர்.

மன்னர் ஷாஜஹான், அவர்களுக்கு மிகவும் மரியாதை செய்தார்கள். பின், அதாவுல்லாஹ் அவர்களே தங்களை பார்ப்பதற்கு நான் மிகவும் ஆவலாகயிருந்தேன். தங்களை சந்தித்ததில் மிக சந்தோஷமாக உள்ளது என்று சொல்லிவிட்டு ஒரு விஷயம் உங்களிடம் கேட்கலாமா என்று கேட்டார்கள் மன்னர். அவர்கள் சரி என்ற பின் கேட்டார்கள், நீங்கள் எப்படி அவ்லியாவாக ஆகினீர்கள், அதை கொஞ்சம் சொல்ல முடியுமா என்று பணிவுடன் வேண்டி நின்றார்.

அவ்வளவுதான், அதாவுல்லாஹ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் விழிகளிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது. மன்னரோ பயந்தவர்களாய், தவறாக எதுவும் கேட்டு விட்டால் மன்னிக்கவும், சொல்லாவிடினும் பரவாயில்லை என்றார்கள். இல்லை இல்லை அப்படியில்லை என்று தொடர்ந்தார்கள் அதாவுல்லாஹ் நாயகம் அவர்கள்,

மன்னர் அவர்களே! நான் ஒரு ஃபகீர் – ஏழை. இந்த நாட்டில் ஒரு வீதியில் நீங்கள் வருவதாக இருந்தால் என்னை போன்றவர்களை அந்த ஊரிலிருந்தே அகற்றி விடுவார்கள். அப்படியான நான் இந்தியா எனும் சாம்ராஜ்ஜியத்தையே ஆளும் மன்னராகிய உங்கள் முன் தலைமுடி ஒதுக்கப்பட்டு, தாடி மழிக்கப்பட்டு, அருசுவை வழங்கப்பட்டு உங்களின் இந்த மாட மாளிகையில் உங்கள் முன் அமர்ந்திருக்கிறேன் என்றால் சிந்தியுங்கள். உங்களை சந்திக்க வேண்டும் என்று எனக்கு ஆசையிருந்தால் அது இந்த உலகில் ஒரு போதும் நிறைவேயிருக்காது, அது பகல் கணவாகவே போயிருக்கும். இப்படியான பங்கரைகள் நம் நாட்டில் இருக்கிறார்களா என்று சொல்லுமளவுக்கு உள்ள இப்பேற்பட்ட பரம ஏழையை இந்திய சாம்ராஜ்ஜியத்தின் மன்னராகிய நீங்கள் என்னை சந்திக்க வேண்டும் என்ற நாட்டம் உங்கள் மனதில் வந்ததால் அது சாத்தியமாகிற்று. இது இப்படியென்றால் எழுவான் புவி படைத்து பரிபாலித்து ரப்புல் ஆலமீனாகிய,வலுப்பமாகிய அர்ஷின் அதிபதியாகிய அல்லாஹ் தஆலாவின் நேசனாக என்னால் எப்படி முடியும் மன்னரே! ஒரு வேளை நீங்க நினைப்பது போல் என்னை அவனது நேசராக ஆக்க வேண்டும் என்ற நாட்டம் இறைவனுக்கு இருப்பதானால், அவன் வேண்டுமானால் எனக்கு இந்த அழியும் உலகின் மேல் ஒரு வெறுப்பை தந்து அதை தாடியை மழித்து, முடியை ஒதுக்கியதை போல் ஒதுக்கி விட்டு, தங்களின் அருசுவை உணவு போன்று அழகான மன்னிப்பை தந்து, தாங்கள் அணிவித்த அழகான ஆடை போல் லிபாஸுத்தக்வா என்ற பயபக்தியின் ஆடையை அணியச்செய்தால் நீங்கள் சொல்வது போல் ஒருவேளை இருக்க்க்கூடும் என்று முடித்தார்கள் அதாவுல்லாஹ் நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு. மன்னர் ஷாஜஹான் நீங்கல் சொல்வது சத்தியம் சத்தியம் என்று கூறியவர்களாக அவர்களின் காலின் விழுந்து நீங்கள் உண்மையிலேயே இறைவனின் நேசர்ர் தான் என்று கதறியழுது விட்டார்கள்.

ஆக அல்லாஹ் தஆலா தனது திருமறையில் தாவூது நபியை பற்றி சொல்லும்போது, நாம் உங்களை நமது பிரதிநிதியாக்கிவைத்தோம் என்று தான் கூறுகிறானே தவிர, வாழ்த்துக்கள் நீங்கள் பிரதிநிதியாகி விட்டீர்கள் என்று கூறவில்லை.

அர்ஷுடைய புதையலாகிறது ‘லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்’ இதற்கு ரஸூலுல் அக்ரம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கம் சொல்லும்போது , பாவத்திலிருந்து தப்பித்துக்கொள்ளவும் முடியாது, நன்மையான காரியங்களை செய்யவும் முடியாது, வலுப்பமாகிய உயர்த்தியாகிய அல்லாஹ் தஆலாவின் உதவி கொண்டே தவிர. இது தான் அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தின் அஸ்திவாரம்!

எனவே இந்த உண்மையை உள்ள உள்ளபடி உணர்ந்து வெற்றி கண்ட அவனது நேசர்களுடன் நம்மையும் நம்மை ஈன்ற பெற்றோர்களையும் நமது சந்ததிகளையும் சேர்த்து வைப்பானாக! ஆமீன்!

வஸல்லல்லாஹு அலா ஷஃபீஉல் முத்னிபீன் ஸெய்யிதினா முஹம்மதின் வஆலிஹி வஅஸ்ஹாபிஹி அஜ்மஈன். வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்!

Related Posts