UPCOMING EVENTS

A prayer in shawwal that showers you abundant blessings…ஷவ்வால் மாதத்திம் சிறப்புத்தொழுகை

ரமழான் ஷரீஃபை பிரிந்து வாடும் முஃமின்களுக்கு ஆறுதல் தரும் ஒர் விஷயம். இந்த ஷவ்வால் மாதத்தில் செய்யும் உன்னதமாக ஒர் அமல். இந்த மாதம் முடியுமுன் அமல்படுத்த முயற்சியுங்கள்! அல்லாஹ் தவ்ஃபீக் செய்வானாக!

ஷவ்வால் மாதம் தொழும் ஸலாத்துல் வுத்கா எனும் தொழுகை…

ரஸூலுல் அக்ரம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருவாய் மலர்ந்தருளியதாக ஸெய்யிதினா அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள் என்று நம் குரு நாதர் கௌதுல் அஃழம் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் பிரசித்தி பெற்ற ‘குன்யத்து லித்தாலிபீன்’ கிதாபில் இடம்பெற்ற வியஷயத்தை கீழே தருகிறோம். இந்த மேலான அமலை புரிய் அல்லாஹ் தஆலா தவ்ஃபீக் செய்வானாக…

தொழும் முறை : இரண்டிரண்டாக 8 ரக்அத்துகள்

ஒவ்வொரு ரக்அத்திலும் ஃபாத்திஹா ஷரீஃபிற்கு பின் 15 முறை குல் ஹுவல்லாஹு அஹத் சூரா ஓதவேண்டும்.

எல்லாம் தொழுது முடித்த பின்…

அல்லாஹ் தஆலாவை தஸ்பீஹ் – 70 முறை (சுப்ஹானல்லாஹ் என்று சுருக்கமாகவோ அல்லது சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி சுப்ஹானல்லாஹில் அழீம் என்றோ ஓதிக்கொள்ள வேண்டும்.)

ஸலவாத் ஷரீஃப் 70 முறை ஓதவேண்டும்.

இதன் சிறப்பு:

ரஸூலுல் அக்ரம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்கிறார்கள்:

என்னை சத்தியத்தின் மீது நபியாக அனுப்பியவன் மீது சத்தியமாக, அல்லாஹ் தஆலா, அந்த ஒருவரின் இதயத்தில் ஆழமாக ஞானத்தின் ஊற்றை சுரக்க வைத்தேயல்லாமல், அவர் நாவு அறிவார்ந்த விஷயங்களை பேசவைத்தேயல்லாமல், இன்னும் இந்த உலகை பீடித்திருக்கும் நோயையும் அதை சீராக்கும் விஷயத்தையும் அவருக்கு அறிவித்தேயல்லாமல், அவர் இந்த தொழுகையை தொழுது கொள்ளமாட்டார்.

ரஸூலுல் அக்ரம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மேலும் சொல்கிறார்கள்:

என்னை சத்தியத்தின் மீது நபியாக அனுப்பியவன் மீது சத்தியமாக, இந்த தொழுகையை எவர் ஒருவர் சொன்னபடி முறையாக செய்கிறாரோ, அவருக்கு அல்லாஹ் தஆலா, பாவமன்னிப்பை  அளித்தே அல்லாமல்,  இந்த தொழுகையின் கடைசி சுஜூதை விட்டும் எழுந்திருக்கமாட்டார். இன்னும் அவர் மரணித்து விட்டால், பாவங்கள் மன்னிக்கப்பட்டவராக தியாகிகளின் பட்டியலில் தான் மரணிப்பார்.

அல்லாஹ் தஆலா அவரது பிரயாணத்தை சேரும் தலம் வரையில் லேசாகவும் இலகுவாகவும் ஆக்கிவைத்தேயல்லாது பிரயாணத்தின் போது இந்த அமலை செய்யமாட்டர்.  இன்னும் இந்த அமலை செய்தவர், கடனாளியாக இருந்தால், அல்லாஹ் தஆலா அவரது கடனை அடைப்பான். இன்னும் அவர் தேவையுள்ளவராக இருந்தால் அவரது தேவைகளை அல்லாஹ் தஆலா பூர்த்தி செய்வான்.

இன்னும் ரஸூலுல் அக்ரம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதன் மகத்துவத்தை பற்றி சொல்கிறார்கள்:

என்னை சத்தியத்தின் மீது நபியாக அனுப்பியவன் மீது சத்தியமாக, ஒருவர் இந்த அமலை செய்கிறதில்லை, அல்லாஹ் தஆலா அவர் ஓதும் ஒவ்வொரு வார்த்தையின் எழுத்திற்கும் ஒரு ‘மஹخர்ரஃபா’வை அல்லாஹ் தஆலா அவருக்காக நட்டுவித்தே அல்லாது.

‘மஹخர்ரஃபா’ என்றால் என்ன என்று ஸஹாபிகள் வினவியபோது சுவனத் தோட்டத்தில் உள்ள ஒரு பழத்தோட்டம். அதில் உள்ள ஒரு மரத்தின் தூரம் எத்தைகயது என்றால், விரைந்து சவாரி செய்யும் ஒரு மனிதன் நூறு வருடங்களாக தொடர்ந்து சவாரி செய்தாலும் அந்த தோட்டத்தில் நின்றும் உள்ள மரத்தில், ஒரு மரத்தின் நிழலை கூட கடக்கமாட்டான் என்று ரஸூலுல் அக்ரம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லி முடித்தார்கள்.

இதன் முழு பயனையும் அந்த கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சங்கை மிகுந்த திருமுகத்திற்காகவே அல்லாஹ் தஆலா நமக்கு நன்கொடை தந்தருள்வானாக! ஆமீன்!!

Related Posts