UPCOMING EVENTS

அல்லாஹ் நேசிக்கும் நல்லவர்களை அறியமுடியுமா?

அல்லாஹ் நேசிக்கும் நல்லவர்களை அறியமுடியுமா என்பது வீன் கேள்வி. அல்லாஹ் முஃமின்களை பார்த்து, சூரா தவ்பா 9:119. ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும் உண்மையாளர்களுடன் நீங்களும் ஆகிவிடுங்கள்” உண்மையாளர்கள் யார் என்று தெரிந்தால் தானே அவர்களுடன் இருக்க முடியும். உண்மையாளர்கள் தானே அவனின் நேசர்கள்!

அடுத்து சூரா அன்பியாவில் 21:7.  நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் நினைவுகூர்பவர்களிடம் கேட்டுத் (தெரிந்து) கொள்ளுங்கள்” என்று வருகிறது. அப்படியென்றால் அறிந்த சமூகம் என்று ஒன்று இருக்கிறது,அறியாத சமூகம் என்று ஒன்று இருக்கிறது. இன்னும் அறிந்தவர்களான அல்லாஹ்வை ஞாபகப்படுத்தும் அவர்கள் உண்மையாளர்கள் என்பதும் விளங்க முடிகிறது. இல்லாவிட்டால் அவர்களிடம் அல்லாஹ் தஆலா கேட்க சொல்வானா?

இன்னும் சொல்லலாம். அடுத்து ஹதீஸ் கிரந்தம். இன்று தவ்ஹீது என்று தங்களுக்கு தானே பெயர் சூட்டிக்கொண்டவர்கள், தங்களுக்கு பிடித்தால் ஸஹீஹ் இல்லாவிட்டால் ழயீஃப் அல்லது இட்டுக்கட்டப்பட்டது என்று புலம்புவதை பார்த்திருப்பீர்கள். அது ஒரு புற இருக்கட்டும் அவர்கள் புஹாரி ஹதீஸ் கிரந்ததை தொடுவதாக இருந்தால் இமாம் புஹாரி நாயகம் அவர்களை இறைவன் நேசிக்கும் நல்லவர் என்று ஒத்துக்கொண்டே ஆக வேண்டும். நல்லவர்களை தானே அல்லாஹ் நேசிப்பான்? அது போல் தான் மற்ற கிரந்தங்களுடைய இமாம்களையும்.

இன்னும் ஸஹீஹ்-ழயீஃப்! அறிவிப்பாளரிடம் குறை இருப்பின் .அதை ழயீஃப் என்பார்கள், இன்னும் பல காரணங்களும் உண்டு.  ஸஹீஹ் என்று வந்துவிட்டால் அறிவிப்பாளர் தொடரில் அனைவருமே நல்லவர்கள் என்று ஆகிவிடும்.

புஹாரி இமாம் தாமாக நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நேரடியாக கேட்கவில்லை. அது தொடராக அறிவிப்பாளர்கள் வழியாக வந்த விஷயமல்லவா? எனவே ஸஹீஹான ஹதீஸ் தொடரில் வரும் அறிவிப்பாளர்கள் அனைவருமே நல்லவர்கள் என்று நம்பியாக வேண்டும். ஒரு சொல்படி மொத்தம் 1744 அறிவிப்பாளர்களின் பெயர் புஹாரி கிரந்தத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் குறைந்த பட்சம் (தவ்ஹீது பேசுபவர்களின் கணக்கின் படி) பாதி பேரையாவது நல்லடியார்கள் என்று நம்பவேண்டும். இது மட்டுமா 200 வருட அறிவிப்பாளர்கள் 1744 பேர் என்றால், புஹாரி இமாமிலிருந்து இன்று வரை? இத்தனை பேரையும், அவர்கள் நல்லடியார்கள் என்று ஒத்துக்கொண்டால் தான் ஹதீஸ் கிதாபை கையில் எடுக்க முடியும்!சிந்திக்க வேண்டும் சகோதரர்களே! இந்த தொடரை தான் நாம்  நல்லடியார்களின் தொடர் என்கிறோம் அல்லது மஷாயிகுமார்களின் ஸில்ஸிலா  என்கிறோம்.

நன்றி : முஹ்யித்தீன் டீவி.காம்