UPCOMING EVENTS

ஒரே நேரத்தில் பல இடங்களில் தோன்றுவது இணைவைப்பிற்கு அளவுகோலா?

ஒரே நேரத்தில் பல இடங்களில் ஷைத்தான் வழிகெடுக்கும் வேலை செய்கிறான்  என்று  சூரா ஸாத் 38:82ல் வரும் ஆயத் சொல்கிறது.   “உன் கண்ணியத்தின் மீது சத்தியமாக, நிச்சயமாக நான் அவர்கள் யாவரையும் வழிகெடுப்பேன்” என்று (இப்லீஸ்) கூறினான். உலகில் வாழும் 650 கோடி பேரையும் கெட்ட ஊசாட்டத்திலாக்கும் சக்தி சபிக்கப்பட்ட ஷைத்தானுக்கு உண்டென்றால், அவனது கிருபைக்குரிய மலக்குகள்?

இன்னும் மலக்குல் மவ்த் தாம் தாம் உங்கள் உயிரைக் கைப்பற்றுவார் என்று சூரா ஸஜ்தாவில் 32:11 சொல்லப்பட்டிருக்கிறது. சதாரனமாக, ஒரே நேரத்தில் எத்தனை உயிரை கைப்பற்றுகிறார்கள். அல்லாஹ் பாதுகாக்கட்டும், ஒரு பேரழிவு வந்தால்?

ஓரே நேரத்தில் கிராமன் காதிபீன் எனும் கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள் நீங்கள் செய்கிறதை அவர்கள் அறிகிறார்கள் என்று  சூரா இன்ஃபிதார் 82:11-12. சொல்கிறதே. எத்தனை கோடி பேருடைய நல்லது கெட்டதுகளை எழுதுகிறார்கள். சுப்ஹானல்லாஹ்!

அது போல் முன்கர் நகீர் அலைஹிமுஸ்ஸலாம் பற்றி புஹாரி ஷரீஃபில் 1338,1374வது ஹதீதில், அடக்கம் செய்யப்பட்ட அடியானை இரண்டு வானவர்கள்  வந்து  எழுப்பி உட்கார வைப்பார்கள், பின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை முன்னிறுத்தி, “முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) எனும் இந்த மனிதரைப் – பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?’ என்று கேட்பார்கள்.” அப்படியென்றால் எத்தனை லட்சம் கப்ருகளுக்கு அவர்கள் விஜயம் செய்து கேள்வி கேட்கிறார்கள், ரஸூலுல் அக்ரம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எத்தனை கப்ருகளுக்கு காட்சி தருகிறார்கள் என்பது விளங்கவரும்.

இன்னும் தொழுகையில் அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு, நபியே உங்களின் மீது ஸலாமும் அல்லாஹ்வின் ரஹ்மத்தும் பரகத்தும் ஏற்படட்டுமாக! (முத்தஃபகுன் புஹாரி ஷரீஃப் 831,6230,6265,6328,7381 முஸ்லிம் ஷரீஃப் 672,677,679) என்ற ஹதீதின் படி நாம் நேரடியாகவல்லா ஸலாம் சொல்கிறோம். ‘க’ என்ற அரபிப்பதம் முன்னால் இருப்பவரை குறிக்கும் சொல்லல்லவா? ஸலாமுக்கு பதில் சொல்வது ஃபர்ழ் என்று சொல்லித்தந்தது நாயகம் அல்லவா? உலகில் தொழாத நேரம் உண்டா? எத்தனை கோடி ஸலாம்?

சிந்திக்க வேண்டும் சகோதரர்களே, பல இடங்களில் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்வார்கள் என்று ஒருவர் சொல்வதை, அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து விட்டான் என்று சொல்வது குர்ஆன் கூறும் ஏகத்துவம் அல்ல என்பதை இங்கே நாம் பதிவு செய்கிறோம்.இது சர்வ சக்தனான அல்லாஹ்வுடைய சக்தியில் நின்றும் வழங்கப்பட்டது, இந்த வியப்பூட்டும் விஷயங்கள் அல்லாஹ் தஆலாவின் வல்லமைக்கும் சக்திக்கும்   ஒரு சின்ன எடுத்துக்காட்டு என்பதே நமது நம்பிக்கை மற்றும் கொள்கையாகும்.

லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்.

நன்றி : முஹ்யித்தீன் டீவி.காம்