UPCOMING EVENTS

முஃமின்களின் முதல் பெருநாள் கொண்டாட்டம் – மீலாதுன்னபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

முஃமின்களின் முதல் பெருநாள் கொண்டாட்டம் – மீலாதுன்னபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

அல்லாஹ்வின் அருட்கொடையை கொண்டும் , அவனுடைய பெருங்கிருபையை கொண்டும் அவர்கள் மகிழ்ச்சியடையட்டும், அவர்கள் திரட்டி வைத்திருக்கும் (செல்வங்களை) விட இது மிக்க மேலானது” என்று ஹபீபே நீங்கள் சொல்லுங்கள் சூரா யூனுஸ் : 58

ரயீஸுல் முஃபஸ்ஸிரீன் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் இந்த ஆயத்திற்கு விளக்கமளிக்கையில், ஃபழ்ல் என்பது ஞானத்தின் ஊற்றாகிய குர்ஆனையும், ரஹ்மத் என்பது ரஸூலுல் அக்ரம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் குறிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

இன்னும் தான் பிறந்த நாளிலும், மறையும் நாளிலும், மீண்டும் உயித்தெழும் நாளிலும் சாந்தி உண்டாகட்டும் (19:33) என்று சொன்ன நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள், யா அல்லாஹ் வானத்திலிருந்து ஒரு சாப்பாட்டு மறவையை இறக்குவாயாக. அந்த நாளை முன்னோர்களும் பின்னோர்களும்  பெருநாளாக கொண்டாடுவார்கள் (5-112-115) என்று இறைஞ்சினார்கள். இதன் பேரில் வானத்திலிருந்து ஒரு சாப்பாட்டு மறவை இறங்கியதை பெருநாளாக கொண்டாடினார்கள் என்றார்கள், அகிலமனைத்திற்கு அருட்கொடையாக வந்த ரஸூலுல் அக்ரம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இவ்வையகத்தில் உதித்த நாள் முஃமின்களுக்கு முதல் பெருநாள் என்பதில் என்ன சந்தேகம்?

அதில் மகிழ்ச்சியுறுங்கள் என்று வல்ல அல்லாஹ் சொல்லியிருக்க, அந்த நாளை கொண்டாக்கூடாது என்று சொல்பவன் நிச்சயமாக முஃமினாக இருக்க முடியாது. மேலும் அந்த பிறந்த நாளில் தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்டுக்கொண்ட இப்லீஸின் குட்டிகள்தான் இந்த முனாஃபிக்குகள் என்பதில் சந்தேகமேயில்லை.